Published:Updated:

பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்தது இலங்கை வாரியம்

விகடன் விமர்சனக்குழு

கொழும்பு, ஏப்.21,2011

ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை மே 15 வரை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ##~~##

தில்ஷான் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மே மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி மே 26-ந் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் விதத்தில் 4-வது ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் தில்ஷான், சங்கக்கரா, மஹேலா ஜெயவர்த்தனே, மேத்யூஸ் உள்பட 11 பேரும் மே 5-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டு இருந்தது.

இலங்கை வீரர்களை மே 15-ம் தேதி வரையிலாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்தது.

இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்திய இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தனதா அலுதமாகே மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இந்தியாவின் வேண்டுகோளை நிராகரிப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

இலங்கை வீரர்கள் சங்கக்கரா டெக்கான் அணிக்கும், ஜெயவர்த்தனே கொச்சி அணிக்கும் கேப்டனாக உள்ளனர். அவர்கள் தாயகம் திரும்பும் போது இவ்விரு அணிகளும் புதிய கேப்டனை நியமிக்கப்பட வேண்டிவரும்.