Published:Updated:

காதலியை மணந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி

விகடன் விமர்சனக்குழு
காதலியை மணந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி
காதலியை மணந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி
காதலியை மணந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி

ஹவுரா: இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனோஜ் திவாரி, தனது காதலி சுஷ்மிதாவை திருமணம் செய்து கொண்டார்.

27 வயதான மனோஜ் திவாரி, சுஷ்மிதா ராய் என்ற இளம் பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறையாக சந்தித்தார். நீண்ட காலம் நண்பர்களாக இருந்து வந்த இவர்களின் நட்பு காதலாக மாறியது.

திவாரி – சுஷ்மிதா திருமணம் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நேற்று முன்தினம் (18ஆம் தேதி) நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு புதுமண ஜோடியை வாழ்த்தினர்.

##~~##
இந்திய அணிக்காக இதுவரை 8 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று இருக்கும் மனோஜ் திவாரி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் இடது கால் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி 4 மாதங்கள் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.