Published:Updated:

ஆஸ்திரேலியாவை வென்று இந்தியா அசத்தல் சாதனை

விகடன் விமர்சனக்குழு
ஆஸ்திரேலியாவை வென்று இந்தியா அசத்தல் சாதனை
ஆஸ்திரேலியாவை வென்று இந்தியா அசத்தல் சாதனை

ரோஹித்,கோலி, தவான் அபாரம்!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றது.

ரோஹித் ஷர்மா மற்றும் கோலியின் சதம் மற்றும் தவானின் துணையுடன் 360 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, இந்திய அணி 43.3 ஓவர்களில் எட்டியது. 39 பந்துகள் மீதமிருந்த நிலையில், ஒரு விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து.

ஆஸ்திரேலியாவை வென்று இந்தியா அசத்தல் சாதனை

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 123 பந்துகளில் 141 ரன்களும், தவான் 95 ரன்கள் எடுத்தார். கோலி ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் சதம் விளாசினார்.

ஆட்டநாயகனாக ரோஹித் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் குறைந்த பந்துகளில் அதாவது 52 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார் கோலி.