Published:Updated:

தவான், கோலி அதிரடி சதத்தில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!

விகடன் விமர்சனக்குழு
தவான், கோலி அதிரடி சதத்தில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!
தவான், கோலி அதிரடி சதத்தில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!
தவான், கோலி அதிரடி சதத்தில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா!

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 6வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தவான், கோலி ஆகியோரின் அதிரடி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7 போட்டிகள் கொண் ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி, நாக்பூரில் இந்திய அணியை சந்தித்தது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது. ஷேன் வாட்சன், கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஆகியோர் அதிரடியாக சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்புக்கு காரணமாக அமைந்தனர்.

பெய்லி 114 பந்துகளில் 6 சிக்சர்கள் 13 பவுண்டரிகள் உட்பட 156 ரன்கள் விளாசினார். வாட்சன் 94 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
351 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணியின் ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் 178 ரன்கள் சேர்த்தனர். ரோகித் ஷர்மா 79 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பவுண்டரிகளாக விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். அதிரடியாக விளையாடிய தவான் (110) தனது 4வது சதத்தை நிறைவு செய்தார்.

##~~##
இதன் பின்னர் சுரேஷ் ரெய்னா 14 ரன்களிலும், யுவராஜ் சிங் ரன் எதுவும் எடுக்காமலும் ஜான்சனின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். எனினும் மற்றொரு முனையில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கோலி 61 பந்துகளில் தனது 17வது சதத்தை நிறைவு செய்தார்.
கடைசி கட்டத்தில் தோனி, கோலிக்கு தோள் கொடுக்க 3 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.
 
இந்த தொடரில் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் , இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பதிவு செய்து சமநிலையில் உள்ளன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி தீபாவளியன்று பெங்களுருவில் நடைபெறுகிறது.