Published:Updated:

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: ரெய்னா நீக்கம், தவானுக்கு இடம்

விகடன் விமர்சனக்குழு

மும்பை: மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் தவான் அணியில் இடம் பிடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவு அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில், இந்த போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சொதப்பி வரும் சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷிகர் தவான் சேர்க்கப்பட்டுள்ளார்.

##~~##
காயம் காரணமாக அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக அமித் மிஸ்ரா அணியில் இடம் பிடித்துள்ளார்.

அணி வீரர்கள்:
தோனி (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், புஜாரா, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஓஜா, அமீத் மிஸ்ரா, ரஹேனா, உமேஷ் யாதவ், ஷமி அகமத், ரோகித் சர்மா, இசாந்த் சர்மா.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 6 ஆம் தேதி நடை பெறுகிறது.