Published:Updated:

ஒரு ரன்னில் தென் ஆப்பிரிக்கா வெற்றி: சொதப்பிய பாகிஸ்தான்!

விகடன் விமர்சனக்குழு
ஒரு ரன்னில் தென் ஆப்பிரிக்கா வெற்றி: சொதப்பிய பாகிஸ்தான்!
ஒரு ரன்னில் தென் ஆப்பிரிக்கா வெற்றி: சொதப்பிய பாகிஸ்தான்!
ஒரு ரன்னில் தென் ஆப்பிரிக்கா வெற்றி: சொதப்பிய பாகிஸ்தான்!

சார்ஜா: சார்ஜாவில் நேற்றிரவு நடந்த பகல் இரவு ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 49.5 ஓவரில் 183 ரன்னில் சுருண்டது. பர்னல் 56 ரன்னும், மில்லர் 37 ரன் னும் எடுத்தனர். சயீத் அஜ்மல் 4 விக்கெட்டும், அப்ரிடி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்கள்.

184 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் ஆடியது. பாகிஸ்தான் அணி இலக்கை நோக்கி முன்னேறியது. அகமது ஷேசாத் 58 ரன்னும், ஹபீஸ் 28 ரன்னும், கேப்டன் மிஸ்பா 31 ரன்னும் எடுத்து சிறப்பாக ஆடி ஆட்டம் இழந்தனர்.

பாகிஸ்தான் வெற்றிக்கு 55 பந்தில் 19 ரன் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது. இதனால் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெறும் என்று கருதப்பட்டது.

ஆனால் தென் ஆப்பிரிக்கா வீரர்களின் அபாரமான பந்துவீச்சில் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் சரிந்தன. ரன் இலக்கை நெருங்க நெருங்க விக்கெட்டுகள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

8 ரன் தேவைப்பட்டது அப்ரிடியும், 7 ரன் தேவைப்பட்டபோது 9வது விக்கெட்டான வாகப் ரியாசும் ஆட்டம் இழந்தனர்.

##~~##
கடைசி விக்கெட்டான அஜ்மல், முகமது இர்பான் ஜோடி 5 ரன்னே எடுத்தது. மார்கல் பந்தில் இர்பான் கடைசியாக ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணி 46.3 ஓவரில் 182 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஒரு ரன்னில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
பர்னல், இம்ரான் தாகீர் தலா 3 விக்கெட்டும், மார்கல், சோட்சோபே தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1–0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2வது போட்டி துபாயில் நாளை நடக்கிறது.