Published:Updated:

கங்குலியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சுஷ்மா வலியுறுத்தல்

Vikatan Correspondent
கங்குலியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சுஷ்மா வலியுறுத்தல்
கங்குலியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சுஷ்மா வலியுறுத்தல்
கங்குலியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சுஷ்மா வலியுறுத்தல்

புதுடெல்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கங்குலியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தினார்.

மக்களவையில் இன்று பேசிய சுஷ்மா, மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவராக உள்ள கங்குலி ராஜினாமா செய்யாவிட்டால் மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை தொடர்ந்து மக்களவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

##~~##
பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.