Published:Updated:

மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

Vikatan Correspondent
மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

வெலிங்டன்: மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 441 ரன் குவித்தது. நேற்றைய 2 நாள் முடிவில் மேற்கிந்திய தீவு அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து இருந்தது. 3ஆம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவு, நியூசிலாந்து வீரர் போல்ட் பந்து வீச்சில் திணறியது.

அந்த அணி 193 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது. போல்ட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

பாலோ ஆன் ஆனதால் மேற்கிந்திய தீவு அணி தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடியது. இந்த இன்னிங்சிலும் மேற்கிந்திய தீவு அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 248 ரன்னுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலையில் மேற்கிந்திய தீவு அணி 175 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 73 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தாண்டில் நியூசிலாந்து பெரும் முதல் வெற்றி இதுவாகும்.

##~~##
முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய போல்ட் 2வது இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
3 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது.