Published:Updated:

டிராவை நோக்கி 2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 299 ரன்; ஜடேஜாவுக்கு 4 விக்கெட்

விகடன் விமர்சனக்குழு
டிராவை நோக்கி 2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 299 ரன்; ஜடேஜாவுக்கு 4 விக்கெட்
டிராவை நோக்கி 2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 299 ரன்; ஜடேஜாவுக்கு 4 விக்கெட்
டிராவை நோக்கி 2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 299 ரன்; ஜடேஜாவுக்கு 4 விக்கெட்

டர்பன்: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸ் இன்றும் முடியாத நிலையில், இந்த டெஸ்ட் டிராவில் முடியவே அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

டர்பனில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்க அணி 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஸ்மித் 35 ரன்களுடனும், அல்விரோ பீட்டர்சன் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஜோடி 103 ரன்களை எட்டிய போது பிரிந்தது. சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, சுமித் (47), பீட்டர்சன் (62) இருவரையும் வெளியேற்றினார். அம்லா 3 ரன் எடுத்த திருப்தியோடு பெளலியனார். 10 ரன்கள் இடைவெளியில் 3 விக்கெட்டுகளும் சரிந்தன.

##~~##
இதன் பின்னர் காலிசும், டி வில்லியர்சும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். தனது கடைசி டெஸ்டில் ஆடும் காலிஸ் நிலைத்து நின்று அசத்தினார். மறுமுனையில் டி வில்லியர்ஸ் அரைசதத்தை கடந்தார். அவர் தொடர்ந்து 10 டெஸ்டுகளில் இவ்வாறு 50 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். சிரமமின்றி ரன்களை சேகரித்த டிவில்லியர்ஸ் 74 ரன்களில் ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார். காலிஸ்–டிவில்லியர்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த டுமினி 28 ரன்களில் வெளியேற்றப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. அதைத் தொடர்ந்து போதிய வெளிச்சமும் இல்லாததால் ஆட்டம் 2 மணி நேரத்திற்கு முன்பாக முடித்துக் கொள்ளப்பட்டது. காலிஸ் 78 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்க அணி இன்னும் 35 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடர்கிறது. இந்த டெஸ்ட் டிராவில் முடியவே அதிகமான வாய்ப்பு இருக்கிறது.