Published:Updated:

சதம் அடித்து விடை பெற்றார் ஜாக் காலிஸ்!

விகடன் விமர்சனக்குழு
சதம் அடித்து விடை பெற்றார் ஜாக் காலிஸ்!
சதம் அடித்து விடை பெற்றார் ஜாக் காலிஸ்!
சதம் அடித்து விடை பெற்றார் ஜாக் காலிஸ்!

டர்பன்: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த தென் ஆப்பிரிக்கா வீரர் காலிஸ் ஓய்வு பெற்றார்.

டர்பனில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்க அணி நேற்று 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது.

அதைத் தொடர்ந்து போதிய வெளிச்சமும் இல்லாததால் ஆட்டம் 2 மணி நேரத்திற்கு முன்பாக முடித்துக் கொள்ளப்பட்டது. காலிஸ் 78 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்க அணி இன்னும் 35 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடர்ந்தது.

##~~##
இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் காலிஸ் தனது 45வது சதத்தை நிறைவு செய்தார். 115 ரன் எடுத்திருந்தபோது காலிஸ், ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து அவரை இந்திய வீரர்கள் கைத்தட்டி பிரியாவிடை கொடுத்தனர்.
பின்னர் ஸ்டெயின் 44 ரன் எடுத்திருந்தபோது ஜாகீர்கான் பந்தில் வீழ்ந்தார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 395 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியைவிட 61 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.