Published:Updated:

வங்கதேசத்துடன் 2வது டெஸ்ட்: சங்கக்கரா முச்சதம்- இலங்கை 587 ரன் குவிப்பு

விகடன் விமர்சனக்குழு
வங்கதேசத்துடன் 2வது டெஸ்ட்: சங்கக்கரா முச்சதம்- இலங்கை 587 ரன் குவிப்பு
வங்கதேசத்துடன் 2வது டெஸ்ட்: சங்கக்கரா முச்சதம்- இலங்கை 587 ரன் குவிப்பு
வங்கதேசத்துடன் 2வது டெஸ்ட்: சங்கக்கரா முச்சதம்- இலங்கை 587 ரன் குவிப்பு

சிட்டகாங்: வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 587 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. சங்கக்கரா அபாரமாக விளையாடி 319 ரன்கள் குவித்தார்.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணாரத்னே (31), சில்வா (11) ஆகியோர் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். பின்னர், வந்த சங்கக்கரா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஜெயவர்த்தனே 72 ரன்கள் குவித்தார்.

சண்டிமால் 27 ரன்னில் ஆட்டம் இழக்க இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்திருந்தது. சங்கக்கரா 160  ரன்னிலும், விதநாகே ரன் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. சங்கக்கரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். விதநாகே 35 ரன்னில் வெளியேற, பின்னர் வந்த பெரைரா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து மெண்டீஸ், சங்கக்கராவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 47 ரன் எடுத்த மெண்டீஸ், ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், சங்கக்கரா நங்கூரமாக விளையாடி முச்சதம் விளாசினார். கடைசி விக்கெட்டையாக சங்கக்கரா வீழ்ந்தார். இவர் 32 பவுண்டரி, 8 சிக்சருடன் 319 ரன்கள் குவித்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 587 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.

##~~##
வங்கதேசம் தரப்பில் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உசேன்  2 விக்கெட்டும், அல் அமீன் உசேன், ஹாசி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
டெஸ்ட் போட்டியில் 287 ரன்னே சங்கக்கராவின் அதிகபட்ச ஸ்கோக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 300 ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சங்கக்கரா இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 34 ரன் அடித்துள்ளார் சங்கக்கரா.
பின்னர் முதல் இன்னிங்சை வங்கதேசம் அணி தொடர்ந்தது. தொடக்க வீரர் தமீம் இக்பால் டக் அவுட் ஆனார். தற்போது வங்கதேசம் அணி ஒரு விக்கெட்டை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது. ரஹ்மான் 19 ரன்னிலும், இம்ரூல் ஹயாஸ் 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.