Published:Updated:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: பாகிஸ்தான்- இலங்கை மோதல்!

Vikatan Correspondent

பாதுல்லா: ஐந்து நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

12வது ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடக்கிறது. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் கலந்து கொள்கிறது.

தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பாதுல்லாவில் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

பாகிஸ்தான்: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அப்துர் ரஹ்மான், அகமது ஷெசாத், அன்வர் அலி, பிலாவால் பாதி, பவாத் ஆலம், ஜூனைத்கான், முகமது ஹபீஸ், முகமது தல்ஹா, சயீத் அஜ்மல், அப்ரிடி, ஷர்ஜீல்கான், சோகைப் மசூத், உமர் அக்மல், உமர்குல்.

இலங்கை: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), சன்டிமால், சதுரங்க டிசில்வா, மஹேலா ஜெயவர்த்தனே, சுரங்கா லக்மல், மலிங்கா, அஜந்தா மென்டிஸ், குசல் பெரேரா, திசரா பெரேரா, தமிக்கா பிரசாத், அஷன் பிரியஞ்சன், சங்கக்கரா, செனநாயகே, திரிமன்னே,