Published:Updated:

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!

Vikatan Correspondent
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!

பாதுல்லா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. உமர் அக்மல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 117 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் அகமதின் அரை சதத்தாலும், உமர் அக்மலின் அபார சதத்தாலும் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. உமர் அக்மல் 102 ரன்னும், அகமத் 50 ரன்னும் எடுத்தனர்.

பின்னர், விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி  47.2 ஓவர்களில் 176 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக நூர் அலி 44 ரன்னும், அஸ்கார் 40 ரன்னும், மங்கள் 35 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹபீஸ் 3 விக்கெட்டும், அஜ்மல், உமர் குல் தலா 2 விக்கெட்டும், அப்ரிடி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக உமர் அக்மல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்றைய போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.