Published:Updated:

20 ஓவர் கிரிக்கெட்: சமி அதிரடியில் தொடரை வென்றது மேற்கிந்திய தீவு!

Vikatan Correspondent
20 ஓவர் கிரிக்கெட்: சமி அதிரடியில் தொடரை வென்றது மேற்கிந்திய தீவு!
20 ஓவர் கிரிக்கெட்: சமி அதிரடியில் தொடரை வென்றது மேற்கிந்திய தீவு!
20 ஓவர் கிரிக்கெட்: சமி அதிரடியில் தொடரை வென்றது மேற்கிந்திய தீவு!

பார்படாஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 5 விக்கெட் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக புட்லர் 67 ரன்னும், காலிஸ் 40 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.

மேற்கிந்திய தீவு தரப்பில் சண்டோகி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராவோ 2 விக்கெட்டும், பேட்ரி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவு அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கெயில்- ஸ்மித் அதிரடியாக விளையாடினர். 16 பந்தில் 30 ரன் எடுத்த ஸ்மித் 3 சிக்சர், 2 பவுண்டரி எடுத்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கெய்ல் 36 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதில் 3 சிக்சர், ஒரு பவுண்டரிகள் அடங்கும். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய சாமுவேல்ஸ் 28 ரன்னிலும், சிம்மோன்ஸ் 19 ரன்னிலும், ருசுல் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

பின்னர், சமி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 18.5 ஓவரில் மேற்கிந்திய தீவு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவு அணி கைப்பற்றியது.

3வது மற்றும் கடைசி போட்டி வரும் 13ஆம் தேதி பிரிட்ஜ்டவுனில் நடைபெறுகிறது.