Published:Updated:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: கோலி அசத்தல்- இறுதிப்போட்டியில் இந்தியா!

Vikatan Correspondent
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: கோலி அசத்தல்- இறுதிப்போட்டியில் இந்தியா!
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: கோலி அசத்தல்- இறுதிப்போட்டியில் இந்தியா!
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: கோலி அசத்தல்- இறுதிப்போட்டியில் இந்தியா!

மிர்பூர்: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, இந்திய அணி  அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க வீரர் காக் 6 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஹாம்லா 22 ரன்களும், பிளிஸிஸ் அதிகபட்சமாக 58 ரன்களும் எடுத்த நிலையில் வெளியேறினர். சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுக்களை அஸ்வின் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது.

இந்திய அணியின் வீரர் ரோஹித் ஷர்மா 24 ரன்களும், ரஹானே 32 ரன்களும் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர். யுவராஜ் சிங் 18 ரன்களும், சுரேஷ் ரெய்னா 21 ரன்களும் எடுத்தனர். விராத் கோஹ்லி அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து பவுண்ட்ரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

கடைசி ஓவரில் ஐந்து பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

டாக்காவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதுகிறது.