Published:Updated:

சச்சின் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்: லாரா

விகடன் விமர்சனக்குழு

லண்டன், ஜூலை 19,2011

சச்சின் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்: லாரா

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா புகழாரம் சூட்டினார். ##~~##

லண்டனில் நடைபெற்ற கிரிக்கெட் விவாதம் ஒன்றில் சச்சின் குறித்து அவர் கூறுகையில், "சச்சின் தனது 16 வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தொடங்கினார். இப்போது அவருக்கு வயது 38. இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். சச்சின் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்.

லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் தனது 100-வது சதத்தைப் பூர்த்தி செய்வதை நேரில் பார்க்கவிருக்கிறேன்," என்றார் லாரா.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஸ்டுவர்ட் விவாதத்தில் பங்கேற்று பேசுகையில், "நவீன காலத்தின் பிராட்மேன்," என சச்சினுக்கு மகுடம் சூட்டினார்.

இந்தியாவின் மற்றொரு சிறந்த வீரரான ராகுல் திராவிட், "இந்தியாவில் பல கடவுள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் சச்சின்," என்றார்.

அதேவேளையில், "சச்சின் சிறப்பானவர் என்றால், திராவிட் ஒரு 'சுவர்'" என்று லாரா பாராட்டினார்.

"சிறந்த விளையாட்டு வீரரான திராவிட், இந்தியாவின் மிகச் சிறந்த நுட்பமான வீரர்களில் ஒருவர்," என்றார் ஸ்டுவர்ட்.