Published:Updated:

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு 3வது வெற்றி; சன்ரைஸ்க்கு 5வது தோல்வி!

விகடன் விமர்சனக்குழு
ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு 3வது வெற்றி; சன்ரைஸ்க்கு 5வது தோல்வி!
ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு 3வது வெற்றி; சன்ரைஸ்க்கு 5வது தோல்வி!

ஹைதராபாத்: ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், மும்பை அணி, ஹைதராபாத் சன்ரைஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு 3வது வெற்றி; சன்ரைஸ்க்கு 5வது தோல்வி!

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிதம்பரம் கவுதம் ஒரு ரன்னில் வெளியேறினார். அணியின் ரன் எண்ணிக்கை இரண்டாக இருந்த போது, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்சுடன் ஜோடி சேர்ந்தார் அம்பத்தி ராயுடு.

இருவரும் நேர்த்தியாக விளையாடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தனர். சிம்மன்ஸ் 50 பந்துகளை எதிர்கொண்டு, 4 சிக்சர், 5 பவுண்டரிகள் அடித்து 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இரண்டு ஓவர்கள் களத்தில் நின்ற அம்பத்தி ராயுடுவும் 68 ரன்கள் எடுத்திருந்த போது, ஹென்ரிக்ஸ் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரோஹித் சர்மாவும், பொல்லார்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடி, 8 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை வசமாக்கினர்.

46 பந்துகளை எதிர்கொண்டு, 2 சிக்சர், 7 பவுண்டரிகள் விளாசிய அம்பத்தி ராயுடு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை ஒன்பது ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, மூன்றில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.