Published:Updated:

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக ஆம்லா நியமனம்!

Vikatan Correspondent
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக ஆம்லா நியமனம்!
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக ஆம்லா நியமனம்!
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக ஆம்லா நியமனம்!

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹாஷிம் ஆம்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த க்ரீம் ஸ்மித், கடந்த மார்ச் மாதம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதையடுத்து டி வில்லியர்ஸ் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஹாஷிம் ஆம்லா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

31 வயதாகும் ஆம்லா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு இருக்கிறது.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குபட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக அவர் செயல்பட்டுள்ளார்.