Published:Updated:

காட்சி கிரிக்கெட்: சச்சின் அணி அசத்தல் பந்துவீச்சு- வார்னே அணி திணறல்

விகடன் விமர்சனக்குழு
காட்சி கிரிக்கெட்: சச்சின் அணி அசத்தல் பந்துவீச்சு- வார்னே அணி திணறல்
காட்சி கிரிக்கெட்: சச்சின் அணி அசத்தல் பந்துவீச்சு- வார்னே அணி திணறல்
காட்சி கிரிக்கெட்: சச்சின் அணி அசத்தல் பந்துவீச்சு- வார்னே அணி திணறல்

லண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் காட்சி கிரிக்கெட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் அணி வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வார்னே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது. யுவராஜ் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார்.

கிரிக்கெட்டில் உலகில் பழமையும், பாரம்பரியமும் கொண்ட புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானம் 1814ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் அந்த மைதானத்தை நிர்வகித்து வரும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பும் (எம்.சி.சி.), உலக லெவன் அணிக்கும் இடையே 50 ஓவர் கொண்ட காட்சி கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

எம்.சி.சி. அணிக்கு ஓய்வு பெற்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், உலக அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்கியது. டாஸ் வென்ற வார்னே, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்- இந்தியாவின் சேவாக் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. 24 பந்தில் 22 ரன்கள் அடித்த சேவாக், 5 பவுண்டரிகளை விளாசினார். இதைத் தொடர்ந்து தமீம் இக்பால் களம் இறங்கினார். இவர் ஒரு ரன்னில் அஜ்மல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்தின் பீட்டர்சன் 10 ரன்னில் வெளியேறினார். பின்னர் இந்தியாவின் யுவராஜ் சிங் களம் இறங்கினார். இவருடன் பாகிஸ்தானின் அப்ரிடி களம் புகுந்தார். ஆனால், அப்ரிடி இந்த காட்சி போட்டியிலும் டக் அவுட் ஆனார். பின்னர் யுவராஜ் சி்ங்குடன், இங்கிலாந்தின் காலிங்வுட் களம் இறங்கினார். ஒரு கட்டத்தில் 68 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்த அணியை யுவராஜ் சிங் அபாரமாக விளையாடி சரிவில் இருந்து அணியை மீட்டார்.

தற்போது,  உலக லெவன் அணி 27 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது.

அஜ்மல் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

சச்சின் அணியில் ராகுல் டிராவிட், ஆரோன் பிஞ்ச், சயீத் அஜ்மல், உமர்குல், கிறிஸ் ரீட், பிரையன் லாரா, டேனியல் வெட்டோரி, பிரெட்லீ, சந்தர்பால், ஷான் டெய்ட் ஆகியோர் உள்ளனர்.

வார்னே அணியில் கெவின் பீட்டர்சன், அப்ரிடி, டினோ பெஸ்ட், முரளிதரன், பீட்டர் சிடில், ஷேவாக், யுவராஜ்சிங், தமிம் இக்பால், ஆடம் கில்கிறிஸ்ட், பால் காலிங்வுட்.