Published:Updated:

பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து கவாஸ்கர் விடுவிப்பு!

Vikatan Correspondent
பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து கவாஸ்கர் விடுவிப்பு!
பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து கவாஸ்கர் விடுவிப்பு!
பி.சி.சி.ஐ தலைவர் பதவியிலிருந்து கவாஸ்கர் விடுவிப்பு!

புதுடெல்லி: பி.சி.சி.ஐ இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சுனில் கவாஸ்கரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் பதவி விலக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், இதனால் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீனிவாசனை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கியது.

இதைத் தொடர்ந்து 7வது ஐ.பி.எல் போட்டி தொடர்பான பணிகளை கவனிக்க பிசிசிஐ இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில், பி.சி.சி.ஐ இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சுனில் கவாஸ்கரை உச்ச நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.