Published:Updated:

இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்: இந்தியா 295 ரன்னுக்கு அவுட்

Vikatan Correspondent
இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்: இந்தியா 295 ரன்னுக்கு அவுட்
இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்: இந்தியா 295 ரன்னுக்கு அவுட்
இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்: இந்தியா 295 ரன்னுக்கு அவுட்

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் தவான் (7), முரளி விஜய் (28), புஜாரா (25), கேப்டன் தோனி (1), ஜடேஜா (3), பின்னி (9) ஆகியோர் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். 145 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணிக்கு ரஹானே கைகொடுத்தார்.

5வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரஹானே, புவனேஸ்வர் குமாருடன் ஜோடி சேர்ந்து 8வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் குவித்தார். 36 ரன்னில் புவனேஸ்வர் குமார் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து முகமது சமி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் குவித்து இந்திய அணி ரன் விகிதத்தை உயர்த்தியது.

டெஸ்ட் போட்டியில் தனது 2வது சதத்தை நிறைவு செய்த ரஹானே, 103 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் முகமது சமி 19 ரன்னில் வெளியேறினார். 12 ரன் எடுத்திருந்த இசாந்த் சர்மா கடைசி வரை ஆட்டம் இழக்கவில்லை. முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்னுக்கு சுருண்டது.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டும், பிராட், ஸ்டோக் தலா 2 விக்கெட்டும், புலுங்கெட், அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் குக்கும், ரோப்சென் களம் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 22 ஆக இருந்தபோது குக் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை புவனேஸ்வர்குமார் வீழ்த்தினார்.

தற்போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது. ரோப்சென் 12 ரன்னிலும், பேலன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.