Published:Updated:

சுத்தமான இந்தியா திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: எல்லோரும் சுத்தமான இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி டெல்லியில் ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களை தூய்மைப்படுத்தும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, துடைப்பத்தை எடுத்து தெருவினை சுத்தம் செய்தார்.

‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்த அமைப்பில் இணைய 9 பேருக்கு அழைப்பு விடுப்பதாக கூறினார். மேலும், இந்த 9 பேரும் இயக்கத்தில் இணைய மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுவிக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த திட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்நிலையில், ஜே.எல்.என். ஸ்டேடியத்தில் மராத்தான் ஓட்ட பந்தயத்தை தொடங்கி வைத்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ''சுத்தமான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நமது சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். மேலும் அதனால், சுகதாரமான இந்தியாவை உருவாக்க முடியும்" என்றார்.