Published:Updated:

கேப்டன் பதவி கிடைத்தது எப்படி? முன்னாள் கிரிக்கெட் வீரர் கும்ப்ளே ருசிகர தகவல்!

விகடன் விமர்சனக்குழு

பெங்களூரு: அணியின் பிற மூத்த வீரர்கள் யாரும் கேப்டன் பொறுப்பேற்க முன் வராததால் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "17 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்த நிலையில், யாருமே கேப்டன் பொறுப்பேற்க முன் வாராத காரணத்தால் நான் இயல்பாகவே கேப்டன் பொறுப்பேற்றேன். ராகுல் டிராவிட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நேரத்தில், தோனிக்கு அதுதான் ஆரம்ப காலகட்டமாக இருந்தது.

சச்சின் டெண்டுல்கரும் கேப்டன் பொறுப்பை விரும்பவில்லை. எனவே சுற்றி பார்த்துவிட்டு அனில் கும்ப்ளே மட்டும்தான் இருக்கிறார். அவருக்கு கேப்டன் பொறுப்பை அளிக்கலாம் என்று என்னிடம் அளித்தனர்.

எனது தலைமை பொறுப்பின் பாணி எப்போதும் இளைஞர்களின் முடிவை உள்ளடக்கிதான் இருந்தது. குறிப்பாக இந்தியாவில் பந்துவீச்சாளராக இருப்பது மிகவும் கடினமான காரியம்" என்று தெரிவித்தார்.

14 போட்டிகளுக்கு கும்ப்ளே கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில் இந்தியா 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும் 5 தோல்வியும் 6 டிராவும் செய்துள்ளது.

132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனில் கும்ப்ளே, 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அனில் கும்ப்ளே 18 ஆண்டுகள் சர்வதேச போட்டிகள் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.