Published:Updated:

ரூம் மேட்டிடம் சண்டை போட்ட தோனி!

விகடன் விமர்சனக்குழு
ரூம் மேட்டிடம் சண்டை போட்ட தோனி!
ரூம் மேட்டிடம் சண்டை போட்ட தோனி!

தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக, ரூம் மேட்களிடம் தோனி சண்டை போட்டதாக அவரைப்பற்றி வெளிவந்துள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

ரூம் மேட்டிடம் சண்டை போட்ட தோனி!

 பிரபல பத்திரிகையாளரான பிஸ்வஸ்தீப் கோஷ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி பற்றி எம்.எஸ்.டி, தி மேன், தீ லீடர் என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் தோனி பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கிரிக்கெட் மீது தோனி அலாதி பிரியம் கொண்டிருந்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பேட் ,விக்கெட் கீப்பிங் கிளவுஸ் போன்றவைகளை வாங்குவதற்காகவே அவர் வேலை தேடி அலைந்ததது பற்றிய தகவல்கள், பின்னர் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் வேலைக்கு சேர்ந்து பணியாற்றியபோது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து அந்த புத்தகத்தில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள காரக்பூரில் தோனி சுமார் 4 ஆண்டுகள் ரயில்வே பரிசோதகராக பணியாற்றியதாகவும், அப்போது சக ரூம்மேட்களிடம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்காக தோனி சண்டை போடுவார் என்றும், அப்படி ஒரு முறை ஏற்பட்ட சண்டையில் தொலைக்காட்சி பெட்டி உடைந்து போனதாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

காரக்பூரில் உள்ள கிரிக்கெட் அணிக்காக தோனி  விளையாடியது, அப்போது ஒரு போட்டிக்கு தோனி 2 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றது... உள்ளிட்ட தோனியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.