Published:Updated:

தானே சம்பாதிக்க ஆசைப்பட்ட ஸ்டார் டி.வி.க்கு ' குட்டு'

விகடன் விமர்சனக்குழு
தானே சம்பாதிக்க ஆசைப்பட்ட ஸ்டார் டி.வி.க்கு ' குட்டு'
தானே சம்பாதிக்க ஆசைப்பட்ட ஸ்டார் டி.வி.க்கு ' குட்டு'

லகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை ஒளிபரப்ப தூர்தர்சனுக்கு விதிக்கப்பட்டத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

தானே சம்பாதிக்க ஆசைப்பட்ட ஸ்டார் டி.வி.க்கு ' குட்டு'

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் டி.வி. உரிமையை ஸ்டார் ஈ.எஸ்.பி.என். நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியா விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை தூர்தர்சனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது விதி. ஆனால் விளம்பர வருமானம் தனக்கு மட்டுமே வரவேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டார் டி.வி. டெல்லி நீதிமன்றத்தில் தூர்தர்ஷன் போட்டிகளை ஒளிபரப்பத் தடை வாங்கியது.   இது குறித்து பிரசார்பாரதி உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய பெஞ்ச், இந்தியா விளையாடும் போட்டிகளை ஒளிபரப்ப தூர்தர்சனுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது. இதனால் வரும் 15ஆம் தேதி நடைபெறும் இந்திய-பாகிஸ்தான் உள்ளிட்ட போட்டிகளை ஒளிபரப்பும் வாய்ப்பை  தூர்தர்சன் பெற்றுள்ளது.