Published:Updated:

ஒன்மேன் ஆர்மியையும் இழந்த ஜிம்பாப்வே...!

Vikatan Correspondent
ஒன்மேன் ஆர்மியையும் இழந்த ஜிம்பாப்வே...!
ஒன்மேன் ஆர்மியையும் இழந்த ஜிம்பாப்வே...!

லகக் கோப்பையின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்து விட்டன. இந்த உலகக் கோப்பை பல வீரர்களுக்கும் அணிகளுக்கும் சாதனை களமாகி விட்டது. சாதனைகள் பல படைக்கப்பட்டாலும் அதில் குறிப்பிட்ட சில வீரர்கள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களை பற்றி பார்ப்போம்...!

இலங்கை வீரர் சங்கக்காரா இந்த உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் 496 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இவரது ஸ்டிரைக்ரேட் 120ஐ நெருங்குகிறது. உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்து புதிய வரலாறையும் எழுதியுள்ளார் சங்கக்காரா. வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையே சங்கக்காரா சதமடித்து அசத்தினார்.

ஒன்மேன் ஆர்மியையும் இழந்த ஜிம்பாப்வே...!

உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிவிரைவு150 ரன்களை அடித்து சாதித்தார் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ். இதுவரை இந்த உலகக் கோப்பையில் 417 ரன்களை டி வில்லியர்ஸ் அடித்துள்ளார். சாராசரி 83.4 ஆகும். ஸ்டிரைக் ரேட் 145 ஆக இருக்கிறது.

ஜிம்பாப்வேயின் பிரண்டன் டெய்லரின் கதைதான் சற்று சோகமானது. இந்த உலகக் கோப்பை போட்டியில் 433 ரன்கள் அடித்து சஙகக்காராவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளார் பிரென்டென் டெய்லர். ஆனால், ஜிம்பாப்வே அணியின் சொதப்பலான ஆட்டம் காரணமாக அந்த அணி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறவில்லை.

பிரென்டன் டெய்லரின் சராசரி 72 ரன்னாக இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 107 ஆகும். ஒன்மேன் ஆர்மி என்பது வேறு எந்த அணிக்கும் பொருந்துகிறதோ இல்லையோ ஜிம்பாப்வே அணிக்கு பிரண்டன் டெய்லர்தான் ஒன்மேன் ஆர்மி. மேலும், ஜிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றில் ஒரே உலகக் கோப்பை போட்டியில் இரண்டு சதமடித்த ஒரே வீரர் பிரென்டன் டெய்லர்தான். அதோடு உலகக் கோப்பை போட்டியில் 400 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே ஜிம்பாப்வே வீரரும் இவர்தான்.

ஒன்மேன் ஆர்மியையும் இழந்த ஜிம்பாப்வே...!

இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான பிரென்டன் டெய்லர் சதமடித்து அசத்தினார். இதற்கு பின், இங்கிலாந்தில் போய் செட்டிலாகவுள்ள பிரண்டன் டெய்லர், இனிமேல ஜிம்பாப்வே அணிக்காகவும் விளையாடப் போவதில்லை. ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனான பிரென்டன் டெய்லர் அந்த அணிக்காக 166 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்தின்  நாட்டிங்ஹாம்ஷயர் அணியில் மூன்று ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் அவர் இனி ஜிம்பாப்வே அணிக்ககா விளையாட முடியாது. உலகக் கோப்பையில் இந்தியாவுடன் நடந்த இறுதி லீக் போட்டிதான், ஜிம்பாப்வே அணிக்காக பிரென்டன் டெய்லர் விளையாடிய கடைசி போட்டியாகவும் அமைந்தது.

ஆஸ்திரேலியாவின் க்ளன் மேக்ஸ்வெல் இந்த உலகக் கோப்பை போட்டியில் 52 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். உலகக் கோப்பை வரலாற்றில் இது இரண்டாவது அதிகவேக சதமாகும்.