Published:Updated:

சூப்பர் ஜோடி வரிசையில் கெயில்-சாமுவேல்சுக்கு முதலிடம்!

Vikatan Correspondent
சூப்பர் ஜோடி வரிசையில் கெயில்-சாமுவேல்சுக்கு முதலிடம்!
சூப்பர் ஜோடி வரிசையில் கெயில்-சாமுவேல்சுக்கு முதலிடம்!

டப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 417 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தது.

இதற்கு முன், கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி 413 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. தென்ஆப்ரிக்க அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 411 ரன்களை எடுத்து இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மீண்டும் தென்ஆப்ரிக்க அணி 408 ரன்களை குவித்தது. இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 376 ரன்களை குவித்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி 372 ரன்களை எடுத்தது அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வருபவை.

சூப்பர் ஜோடி வரிசையில் கெயில்-சாமுவேல்சுக்கு முதலிடம்!

அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பட்டியலிலும் ஆஸ்திரேலிய அணியே முதலிடத்தில் இருக்கிறது. பெர்த்தில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 417 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி 142 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில், அதிக ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையையும் ஆஸ்திரேலியா படைத்தது. அடுத்து தென்ஆப்ரிக்க அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அயர்லாந்து அணியை தென்ஆப்ரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியசத்தில் வென்றது. இலங்கை அணி ஸ்காட்லாந்து அணியை 148 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆகியவை அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி வரிசையில் இடம் பிடிக்கின்றன.

அதிக ஓவர்களை கையிருப்பில் வைத்து வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் நியூசிலாந்து அணி

சூப்பர் ஜோடி வரிசையில் கெயில்-சாமுவேல்சுக்கு முதலிடம்!

முதலிடத்தில் இருக்கிறது. வெலிங்கடன் நகரில் நடந்த போட்டியில்,முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 123 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பிரெண்டன் மெக்கல்லமின் அதிரடியால் நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் வெற்றிக்கு தேவையான ரன்களை எட்டியது.

அதிக ரன்களை குவித்த ஜோடி வரிசையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கெயில்,சாமுவேல்ஸ் ஜோடி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 372 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறது. இதில் கெயில் 147 பந்துகளில் 215 ரன்களும் சாமுவேல்ஸ் 156 பந்துகளில் 133 ரன்களும் விளாசினர். அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்மித் ஜோடி 260 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தென்ஆப்ரிக்காவின் மில்லர், டுமினி ஜோடி 256 ரன்கள் அயர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்ரிக்காவின் ஆம்லா, டுப்லெசிஸ் ஜோடி 247 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக திரிமண்னே,சங்கக்காரா ஜோடி 212 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாகும்.