Published:Updated:

1992 திரும்பும்... சொல்கிறார் பாகிஸ்தான் கேப்டன்!

Vikatan Correspondent
1992 திரும்பும்... சொல்கிறார் பாகிஸ்தான் கேப்டன்!
1992 திரும்பும்... சொல்கிறார் பாகிஸ்தான் கேப்டன்!

பாகிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பையை வெல்லும் தகுதி இருப்பதாக அந்த அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்

1992 திரும்பும்... சொல்கிறார் பாகிஸ்தான் கேப்டன்!

கடந்த 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் செமத்தியாக அடி வாங்கியது. கத்தி கதறிதான் நாக்அவுட் சுற்று ஆட்டத்துக்கும் தகுதி பெற்றது. நாக்அவுட் சுற்று ஆட்டங்களில், எதிரணிகளை துவம்சம் செய்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையையும் வென்று காட்டி விட்டது. அப்போது அந்த அணியின் கேப்டனாக இம்ரான் கான் இருந்தார்.

தற்போது அதே பாணியில்தான் பாகிஸ்தான் அணி பயணித்துக் கொண்டிருக்கிறது. முதலில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியை தழுவினாலும் அடுத்து தொடர்ச்சியாக 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் டி வில்லியர்சின் தென்ஆப்ரிக்காவும் அடங்கும்.இந்த தொடர்ச்சியான வெற்றிகள் பாகிஸ்தான் அணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக அந்த அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,''தற்போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசத் தொடங்கியுள்ளனர். பேட்ஸ்மேன்களும் பொறுப்பை உணர்ந்து ஆடத் தொடங்கியுள்ளனர். எங்களது நேர்த்தியான பந்துவீச்சு எந்த அணியையும் திணற அடிக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் எதுவும் நடக்கும்.

அயர்லாந்து அணிக்கு எதிராக ஷர்ஃபராஸ் கான் சதமடித்தார், சேஷாத் 63 ரன்கள் அடித்தார். இது அவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த அணிக்குமே கூடுதல் பலத்தை தந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பையை வெல்ல முழுத் தகுதி உள்ளது.பாகிஸ்தான் அணி இரண்டாவது முறையாக இந்த உலகக் கோப்பையை வெல்லும் '' என்றார்.