Published:Updated:

எனது மகள் சினிமாவில் நடிக்க மாட்டார்: சச்சின் மறுப்பு!

Vikatan Correspondent
எனது மகள் சினிமாவில் நடிக்க மாட்டார்: சச்சின் மறுப்பு!
எனது மகள் சினிமாவில் நடிக்க மாட்டார்: சச்சின் மறுப்பு!

எனது மகள் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

எனது மகள் சினிமாவில் நடிக்க மாட்டார்: சச்சின் மறுப்பு!

கிரிக்கெட் நட்சத்திரம் சச்சினுக்கு சாரா என்ற மகள் உள்ளார். தற்போது 18 வயதாகும் சாரா, பாலிவுட் படத்தில் சாகித் கபூர் ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சாரா சினிமாவில் நடிக்க மாட்டார் என சச்சின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில், எனது மகள் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் சினிமாவில் நடிக்கிறார் என்று வெளியான செய்தி முற்றிலும் ஊக அடிப்படையிலானது என்று கூறியுள்ளார்.

திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்து வரும் சாராவை ,  கிரிக்கெட் போட்டிகளின் போது சச்சினுடன் பார்க்க முடியும். சச்சின் ஓய்வு பெற்ற பிறகுதான் சாராவை அவ்வளவாக கிரிக்கெட் மைதானங்களில் காண முடிவதில்லை.