Published:Updated:

லஷ்மண், டோனி சதம்: இந்தியா 631 ரன்களில் டிக்ளேர்

விகடன் விமர்சனக்குழு
லஷ்மண், டோனி சதம்: இந்தியா 631 ரன்களில் டிக்ளேர்
லஷ்மண், டோனி சதம்: இந்தியா 631 ரன்களில் டிக்ளேர்

கொல்கத்தா, நவ.15,2011

லஷ்மண், டோனி சதம்: இந்தியா 631 ரன்களில் டிக்ளேர்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில், இந்திய அணி 631 ரன்கள் குவித்து டிக்ளேர் செயதது.

ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, லஷ்மண் மற்றும் டோனி ஆகியோரின் அபார சதங்களால் அணியின் ரன் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.

இந்திய தனது முதல் இன்னிங்ஸ்சில் 151.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 631 ரன்கள் குவித்து டிக்ளேர் செயதது.

லஷ்மண் மிகச் சிறப்பாக பேட் செய்து, ஆட்டமிழக்காமல் 176 ரன்கள் குவித்தார். அதிரடியாக பேட் செய்த டோனி 144 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக, டிராவிட் 119 ரன்களைக் குவித்து, அணிக்கு சிறப்பான துவக்கத்துக்கு வித்திட்டார். கம்பீர் 65 ரன்களையும், சேவாக் மற்றும் சச்சின் ஆகியோர் தலா 38 ரன்களையும் சேர்த்தனர். யுவராஜ் சிங் 25 ரன்கள் எடுத்தார்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் சம்மி, ரோக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், எட்வர்ட்ஸ், பிஷூ, பிராத்வைட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் தடைபட்டது.

இந்திய தரப்பில் அஸ்வின், யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.