Published:Updated:

சிட்னி டெஸ்ட் நாள் 2: வலுவான ஆஸி. 482/4

Vikatan Correspondent
சிட்னி டெஸ்ட் நாள் 2: வலுவான ஆஸி. 482/4
சிட்னி டெஸ்ட் நாள் 2: வலுவான ஆஸி. 482/4

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில், 4 விக்கெட் இழப்புக்கு 482 ரன்கள் குவித்திருந்தது.

அந்த அணியின் மைக்கேல் கிளார்க் 251 ரன்கள் குவித்த நிலையில் களத்தில் உள்ளார். முன்னதாக, ரிக்கி பான்டிங் 134 ரன்கள் குவித்து, ஆட்டமிழந்தார்.

ஹஸ்சி 55 ரன்கள் எடுத்த நிலையில், கிளார்க்குக்கு உறுதுணையாகவுள்ளார்.

முன்னதாக, இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்சில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தற்போது, ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் முன்னிலையில் உள்ளதால், அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.