Published:Updated:

ஆசியக் கோப்பை அணியில் சச்சின்; துணை கேப்டனாகிறார் கோலி!

Vikatan Correspondent
ஆசியக் கோப்பை அணியில் சச்சின்; துணை கேப்டனாகிறார் கோலி!
ஆசியக் கோப்பை அணியில் சச்சின்; துணை கேப்டனாகிறார் கோலி!
ஆசியக் கோப்பை அணியில் சச்சின்; துணை கேப்டனாகிறார் கோலி!

மும்பை: ஆசிய கோப்பைக்கான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

மூத்த வீரர் வீரேந்திர சேவாக்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் வீரர் விராட் கோலி துணைக் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 11-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை வங்கதேசத்தில் நடக்கிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான சச்சின், சேவாக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இன்று மும்பையில் நடைபெற்றது.

இதில், தற்போது மோசமான ஃபார்மில் உள்ள சேவாக்குக்கு ஓய்வு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில், சச்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டோனி தலைமையிலான இந்திய அணியில் துணைக் கேப்டன் பொறுப்பு, விராட் கோலிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் யூசுப் பதான், அசோக் திந்தா, மனோஜ் திவாரி ஆகியோருக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய அணி விவரம்:

மகேந்திர சிங் டோனி (கேப்டன்)
விராட் கோலி (துணை கேப்டன்)
சச்சின் டெண்டுல்கர்,
கவுதம் கம்பீர்
ரோஹித் சர்மா
சுரேஷ் ரெய்னா
ரவீந்திர ஜடேஜா
ரவிச்சந்திரன் அஸ்வின்
பிரவீண் குமார்
வினய் குமார்
ராகுல் சர்மா
இர்பான் பதான்
யூசுப் பதான்
அசோக் திந்தா
மனோஜ் திவாரி