Published:Updated:

ஐ.பி.எல்.: இர்ஃபான் அதிரடியில் கொல்கத்தாவை வென்றது டெல்லி!

Vikatan Correspondent
ஐ.பி.எல்.: இர்ஃபான் அதிரடியில் கொல்கத்தாவை வென்றது டெல்லி!
ஐ.பி.எல்.: இர்ஃபான் அதிரடியில் கொல்கத்தாவை வென்றது டெல்லி!
ஐ.பி.எல்.: இர்ஃபான் அதிரடியில் கொல்கத்தாவை வென்றது டெல்லி!

கொல்கத்தா: ஐ.பி.எல். சீசன் 5 டிவென்டி-20 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், இர்பான் பதானின் அதிரடி பேட்டிங்கின் துணையுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

மழை காரணமாக, 12 ஓவராக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேவாக் தலைமையிலான டெல்லி அணி, 11.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

துவக்க ஆட்டக்காரர்களான ஃபின்ச் 30 ரன்களையும், சேவாக் 20 ரன்களையும் சேர்த்தனர். இர்ஃபான் பதான் ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 42 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு உறுதுணைபுரிந்தார். 

முன்னதாக, கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி தனது இன்னிங்ஸ்சில், நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 97 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக, சுக்லா 26 ரன்களையும், தாஸ் 18 ரன்களையும் எடுத்தனர்; கம்பீர் 16 ரன்கள் சேர்த்தார். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

டெல்லி தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய மோர்கெல் 3 விக்கெட்டுகளையும், மெர்வே மற்றும் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் இர்ஃபான் பதான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.