Published:Updated:

ஆஸி.க்கு மகிழ்ச்சி! இந்தியாவுக்கு சோகம்! இது தான் பாக்ஸிங் டே வரலாறு! #BoxingDayTest

Vikatan Correspondent
ஆஸி.க்கு மகிழ்ச்சி! இந்தியாவுக்கு சோகம்! இது தான் பாக்ஸிங் டே வரலாறு! #BoxingDayTest
ஆஸி.க்கு மகிழ்ச்சி! இந்தியாவுக்கு சோகம்! இது தான் பாக்ஸிங் டே வரலாறு! #BoxingDayTest

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரை ஒரு யுத்தமாக பார்க்கிறது என்றால் அதற்கு இணையானது தான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியும். அதாவது எல்லா வருடமும் எதாவது ஒரு அணியுடன் ஆஸ்திரேலிய அணி டிசம்பர் 26-ம் தேதி மெல்பெர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஆடும். அதனை வென்றே தீர வேண்டும் என்ற வெறியோடு ஒவ்வொரு முறையும் ஆக்ரோஷமாக ஆஸி அணி களமிறங்கும்.

பாக்ஸிங் டே வரலாறு!

விக்டோரியா அணிக்கும், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் இடையே ஷெஃபீல்டு ஷீல்டு போட்டி கிறிஸ்துமஸ் சமயத்தில் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதில் பாக்ஸிங் டேயும் அடக்கம். நியூ சவுத் வேல்ஸ் வீரர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மிஸ் செய்ய வேண்டியிருந்தது. மேலும் 1975 வரை ஆஷஸ் தொடரின் குறுக்கீடு இருந்து வந்ததால் பாக்ஸிங் டே அன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை. ஆனால் அதன் பின் மாடர்ன் பாக்ஸிங் டே டெஸ்ட்டுகளுக்காக மெல்பெர்ன் மைதானம் தன்னை டிசம்பர் 26 மொத்தமாக ஆஸி கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.

ஆஸியின் சாம்ராஜ்ஜியம்:

பாக்ஸிங் டே என்பது ஆஸிக்கு ராசியான டெஸ்ட் போட்டி என்று தான் கூற வேண்டும். இதுவரை 40 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா. 23 டெஸ்ட்களை வென்றுள்ளது, 9 போட்டிகளை ட்ரா செய்துள்ளது. வெறும் 8 போட்டிகளை மட்டுமே தோற்றுள்ளது. இதில் 3 போட்டிகளை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 1998 முதல் 2008 வரை ஆஸி அணியை பாக்ஸிங் டேயில் வீழ்த்த முடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி 41-வது டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி கண்டிப்பாக வெல்லும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்ற போட்டியில் பாகிஸ்தான் இறுதிவரை சோதனை அளித்ததை ஆஸி மறந்திருக்காது என்பதால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. 2013-ம் ஆண்டு பாக்ஸிங் டே போட்டியை மைதானத்துக்கு வந்து 2.77 லட்சம் பேர் பார்த்ததே பாக்ஸிங் டே வரலாற்றில் மிக அதிக பேர் பார்வையிட்டதாக உள்ளது. 1989-ம் ஆண்டு மட்டும் பாக்ஸிங் டே போட்டி டெஸ்ட் போட்டியாக அல்லாமல் ஒருநாள் போட்டியாக இலங்கை அணிக்கு எதிராக நடத்தப்பட்டது. 

இந்தியாவின் பாக்ஸிங் டே சோகம்! 

இந்தியா இதுவரை 7 முறை பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டுள்ளது. இதில் 5 தோல்வியும், இரண்டு ட்ராக்களும் அடங்கும். இறுதியாக 2014-ம் ஆண்டு நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை கோலி, ரஹானே சதத்துடன்  இந்தியா ட்ரா செய்தாலும் அப்போதைய இந்திய டெஸ்ட் கேப்டன் தோனியின் ஓய்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆக மொத்தத்தில் இந்தியாவுக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கும் ராசியில்லை என்பது தான் உண்மை. 

இன்று நடக்க இருக்கும் போட்டியில் ஆஸி அணியில் மாற்றம் இல்லை என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆஸி அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஸ்டார்க் தனது முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் இது என்றும், இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

பரபரப்பான இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஆஷஸ் யுத்தம் போன்றது தான் பாக்ஸிங் டே..பார்ப்பொம் ஆஸியின் சாதனை தொடருமா என்று....

- ச.ஸ்ரீராம்