Published:Updated:

பாலியல் குற்றச்சாட்டு:ஐ.பி.எல். வீரர் லூக் மீதான வழக்குகள் வாபஸ்!

விகடன் விமர்சனக்குழு
பாலியல் குற்றச்சாட்டு:ஐ.பி.எல். வீரர் லூக் மீதான வழக்குகள் வாபஸ்!
பாலியல் குற்றச்சாட்டு:ஐ.பி.எல். வீரர் லூக் மீதான வழக்குகள் வாபஸ்!
பாலியல் குற்றச்சாட்டு:ஐ.பி.எல். வீரர் லூக் மீதான வழக்குகள் வாபஸ்!

புதுடெல்லி:அமெரிக்க பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக ஐ.பி.எல்.பெங்களூர்  ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் லூக் மீது பதிவு  செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது.

டெல்லி நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்தில் லூக் தன்னிடம் தவறாக நடக்க  முயன்றதாக,அமெரிக்க வாழ் இந்திய பெண்ணான சொகைல் ஹமீது டெல்லி  காவல்துறையில் புகார் கொடுத்தார்.இது தொடர்பாக லூக் கைது செய்யப்பட்டார்.பின்னர்  நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து அந்த அணியின்  உரிமையாளர் சித்தார்த் மல்லையா அமெரிக்க பெண் பற்றி தெரிவித்த கருத்தும் மேலும்  சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அவருக்கு சொகைல் ஹமீது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி  இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க பெண் சொகைல் ஹமீதுவுக்கும், பெங்களூர் அணி  நிர்வாகத்துக்கும் இடையே நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் லூக் மீதான அனைத்து வழக்குகளையும் சொகைல் ஹமீது வாபஸ் பெறுகிறார்.  இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ரஜ்னிஷ் சோப்ரா கூறும்போது, ஆஸ்திரேலிய வீரர்  லூக் மீதான வழக்கு வாபஸ் பெறப்படுகிறது.இதுதொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில்  வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பான மனுவை தாக்கல் செய்யப்படுகிறது என்றார்.