Published:Updated:

கங்குலியை ஓவர்டேக் செய்த டிவில்லியர்ஸ்!

Vikatan Correspondent
கங்குலியை ஓவர்டேக் செய்த டிவில்லியர்ஸ்!
கங்குலியை ஓவர்டேக் செய்த டிவில்லியர்ஸ்!
கங்குலியை ஓவர்டேக் செய்த டிவில்லியர்ஸ்!

தென் ஆப்ரிக்கா- நியூஸிலாந்து அணிகள் மோதிய, மூன்றாம் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது.  இந்தப் போட்டியில் சர்வதேச அரங்கில் வேகமாக 9,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை டிவில்லியர்ஸ் பெற்றுள்ளார். இதன்மூலம் கங்குலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இவர் 205 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களை கடந்துள்ளார். கங்குலி 228 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களை கடந்திருந்தார்.  

டிவில்லியர்ஸ் 9,000 ரன்களை கடந்துள்ள 18-வது தென் ஆப்ரிக்கா வீரர். குறிப்பாக, இந்தப் போட்டியில் டிவில்லியர்ஸ் 80 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச அளவில் 9,000 ரன்களை வேகமாக கடந்தவர்களின், டாப் 10 பட்டியலில் கங்குலி, டிராவிட், தோனி என இந்தியர்களின் ஆதிக்கமே அதிகம்.