Published:Updated:

'நம்ப முடியவில்லை'!- கேப்டன் கோலி நெகிழ்ச்சி

ர.பரத் ராஜ்
'நம்ப முடியவில்லை'!- கேப்டன் கோலி நெகிழ்ச்சி
'நம்ப முடியவில்லை'!- கேப்டன் கோலி நெகிழ்ச்சி
'நம்ப முடியவில்லை'!- கேப்டன் கோலி நெகிழ்ச்சி

உலகில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் டெஸ்ட் அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா விளையாடிய பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபியை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தர்மசாலாவில் நடைபெற்ற கடைசி போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. 

இந்தத் தொடரில் நடைபெற்ற நான்கு போட்டிகளில் ஜடேஜா 25 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலிய அணியை மிரளவைத்தார். மேலும், ஐ.சி.சி டெஸ்ட் பௌலர்களின் தரவரிசைப் பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தார்.

'நம்ப முடியவில்லை'!- கேப்டன் கோலி நெகிழ்ச்சி

இதையடுத்து, ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை வாங்கிய ஜடேஜா, 'உண்மையில் நம்பர் ஒன் பௌலராக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான், இந்தத் தொடரில் பேட் செய்யும்போது, சற்று நிதானமான ஆட்டத்தைக் கையாண்டேன். ஒரு முழுமையான விளையாட்டு வீரராக நான் வளர்ச்சியடைந்தது சிறப்பாக இருந்தது. ஒருமுனையில் நானும் மறுமுனையில் அஷ்வினும் விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டே இருந்தோம். இதனால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது. அவருடன் பந்து வீசுவதே சிறந்த அனுபவம் தான். நாங்கள் இந்தியாவுக்கு வெளியேயும் நன்றாக பந்து வீசுவோம் என்று நம்புகிறோம். நான் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறேன். விரைவில் சதம் அடிப்பேன்' என்று கூறினார். 

தொடர் வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, 'வெற்றி பெற்றதை எங்களால் நம்பவே முடியவில்லை. இதுதான் நாங்கள் விளையாடியதிலேயே மிகச் சிறந்த தொடர் என்று நினைக்கிறேன். நாங்கள் தொடரின் ஆரம்பத்தில் தோற்று இருந்தாலும் எங்கள்  அணியினர் சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்தனர். இந்தத் தொடரில் குறிப்பிட்டு ஒரு பௌலர் நன்றாக பந்து வீசினார் என்று சொல்ல முடியாது. அதேபோல, குறிப்பிட்ட சில பேட்ஸ்மேன்கள் மட்டும் நன்றாக விளையாடினார் என்றும் கூற முடியாது. ஒரு அணியாக நாங்கள் நன்றாக விளையாடினோம்' என்று நெகிழ்வாக பேசினார்.