Published:Updated:

நம்பர் ஒன் பிடித்த இந்திய அணிக்கு ஜாக்பாட்!

அஸ்வினி.சி
நம்பர் ஒன் பிடித்த இந்திய அணிக்கு ஜாக்பாட்!
நம்பர் ஒன் பிடித்த இந்திய அணிக்கு ஜாக்பாட்!

சர்வதேச டெஸ்ட் அரங்கில் ’நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  சார்பாக 6.51 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நம்பர் ஒன் பிடித்த இந்திய அணிக்கு ஜாக்பாட்!


 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. ஏற்கெனவே நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு டெஸ்டில் இரு அணிகளும் வெற்றிபெற்றிருந்தன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. நான்காவது டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.  

இந்திய அணிக்கு இது ஏழாவது தொடர் வெற்றி ஆகும். இதுவரை இலங்கை, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவு அணி, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தியுள்ளது. சர்வதேச டெஸ்ட் அரங்கில் ’நம்பர் ஒன்’ இடத்தை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டது. முதல் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ஐ.சி.சி சார்பாக ஒரு மில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் 6.51 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  ஐ.சி.சி. சார்பாக கவாஸ்கர் இந்திய அணி கேப்டன் கோலியிடம் கோப்பையும் 6.51 கோடி ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.