Published:Updated:

திரும்பி வருகிறார் ஹர்ஷா போக்லே!

நமது நிருபர்
திரும்பி வருகிறார் ஹர்ஷா போக்லே!
திரும்பி வருகிறார் ஹர்ஷா போக்லே!

ஒரு வருட காலம் கிரிக்கெட் வர்ணனைசெய்வதில் இருந்து நீக்கப்பட்ட ஹர்ஷா போக்லே, மீண்டும் வருகிறார்.

திரும்பி வருகிறார் ஹர்ஷா போக்லே!


நாக்பூரில், இந்தியா-நியூஸிலாந்து டி-20 போட்டியின்போது, விதர்பா கிரிக்கெட் சங்கத்தினருக்கும்  ஹர்ஷா போக்லேவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அமிதாப் பச்சன் தன் ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய வர்ணனையாளர்  வேறு விஷயங்களைப் பேசுவதைத் தவிர்த்து, தங்கள் வீரர்களைப் பற்றிப் பேசினால் நல்லது' என்று பதிவிட்டார். 

அப்போதைய கேப்டன்  தோனி, அமிதாப்பின் பதிவைப் பகிர்ந்தார். இதையடுத்து, ஹர்ஷா போக்லேவை  வர்ணனையாளர்கள் பிரிவிலிருந்து, பிசிசிஐ நீக்கியது. கிரிக்கெட் ரசிகர்களிடம் நற்பெயரைக்கொண்ட ஹர்ஷா போக்லே நீக்கப்பட்ட விவகாரம், ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஹர்ஷா போக்லே வரும் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் வர்ணனை செய்யவிருப்பதாக சோனி நிறுவனத்தின் பிரசன்னகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிசிசிஐ-யில் புதிய நிர்வாகம் வந்துள்ளதால், போக்லேவுடனான சிக்கல் தீர்ந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டைப் போலவே, இம்முறையும் ஐபிஎல் போட்டிகள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வர்ணனை செய்யப்பட உள்ளது.