Published:Updated:

ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தவும்: கோலிக்கு டோனி அட்வைஸ்!

விகடன் விமர்சனக்குழு
ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தவும்: கோலிக்கு டோனி அட்வைஸ்!
ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தவும்: கோலிக்கு டோனி அட்வைஸ்!
ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தவும்: கோலிக்கு டோனி அட்வைஸ்!

புதுடெல்லி: ஆடுகளத்தில் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோலிக்கு  கேப்டன் டோனி அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீரா  கோலி.அவரது சிறப்பான ஆட்டத்தால் ஆசிய கோப்பை போட்டியில் துணை கேப்டன்  பதவி அவருக்கு கிடைத்தது. ஆடுகளத்தில் அதிகமாக ஆக்ரோஷம் அடைபவர் கோலி.

பேட்டிங்கினாலும், பீல்டிங்கினாலும்...அவர் உணர்ச்சி மிகுதியால்  ஆக்ரோஷத்தை  வெளிப்படுத்துவார். அவரது இந்த செயல் குறித்து  கிரிக்கெட் வட்டாரத்தில் தொடர்பாக  அதிகம் விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில்,  இது தொடர்பாக கேப்டன் டோனி அவருக்கு ஆலோசனை வழங்கி  இருக்கிறார்.”ஆடுகளத்தில் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்துங்கள். எல்லை தாண்ட  வேண்டாம்” என்று அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கோலி, ”டோனி எனக்கு பல முறை ஆலோசனை  வழங்கியுள்ளார்.ஆடுகளத்தில் அமைதியாக இருக்க வேண்டும்.ஆக்ரோஷத்தை  கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறுவார்.அவரது அறிவுரையால் இப்போது நான் மிகவும்  மேம்பட்டு இருக்கிறேன்.

தற்போது எனக்கு துணை கேப்டன் பதவி கிடைத்துள்ளது.ரசிகர்கள் என்னை பற்றி  பேசிக்கொள்வார்கள். இதனால் எனது நடவடிக்கையில் மாற்றம் தேவை. நான் சீனியர்  பேட்ஸ்மேன் இல்லை. இளம் வீரர் என்பதால் அதிகமான ஆக்ரோஷம் இருக்கலாம்.  இதை கட்டுப்படுத்துவது அவசியம் தான்”என்றார்.