Published:Updated:

அஸ்லான் ஷா ஹாக்கிக் கோப்பை: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா!

சண்முகபாண்டியன்.தே
அஸ்லான் ஷா ஹாக்கிக் கோப்பை: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா!
அஸ்லான் ஷா ஹாக்கிக் கோப்பை: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா!

இன்று நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில், 4-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியுள்ளது இந்திய அணி.

அஸ்லான் ஷா ஹாக்கிக் கோப்பை: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா!

1983ல் தொடங்கி ஆடவர்களுக்கான சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. 26-வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா,  நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன.

கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி இன்று ஜப்பானுடன் மோதியது. இதில் 4-3 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்திய வீரர் மந்திப் சிங் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும், இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து 5-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் மலேசியாவை எதிர்த்து விளையாடுகிறது இந்தியா.