Published:Updated:

அரபு கால்பந்து கிளப்புக்கு பயிற்சியாளரானார் மாரடோனா!

நா.செந்தில் குமார்
அரபு கால்பந்து கிளப்புக்கு பயிற்சியாளரானார் மாரடோனா!
அரபு கால்பந்து கிளப்புக்கு பயிற்சியாளரானார் மாரடோனா!

ஐக்கிய எமிரேட்ஸ் நாடுகளுக்குள் நடக்கும் 'டிவிஷன் ஒன்' கால்பந்துப் போட்டிகள் பிரபலமடைந்து வருகின்றன. இதன் முக்கிய கிளப்களில் ஒன்று, 'அல்-புஜாரியா'. இந்த கிளப்பின் பயிற்சியாளாராக, முன்னாள் கால்பந்து சாம்பியன் மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை, அவரே தனது முகநூலில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இதே ஐக்கிய எமிரேட்ஸ் நாட்டு கிளப்களில் ஒன்றான அல்-வாசலின் மேலாளராகப் பணியாற்றியபோது, திடீரென மாரடோனா நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.