Published:Updated:

#IPL10: 73 ரன்களுக்கு சுருண்டது பஞ்சாப்... அரையிறுதி வாய்ப்பு கேள்விக் குறி..!

சண்முகபாண்டியன்.தே
#IPL10: 73 ரன்களுக்கு சுருண்டது பஞ்சாப்... அரையிறுதி வாய்ப்பு கேள்விக் குறி..!
#IPL10: 73 ரன்களுக்கு சுருண்டது பஞ்சாப்... அரையிறுதி வாய்ப்பு கேள்விக் குறி..!

இன்று ஐபிஎல் தொடரின் 55-வது போட்டி புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடைபெறுகிறது. முதலில் ஆடிய பஞ்சாப் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

#IPL10: 73 ரன்களுக்கு சுருண்டது பஞ்சாப்... அரையிறுதி வாய்ப்பு கேள்விக் குறி..!

ஐபிஎல் 55-வது போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. புனே - பஞ்சாப் அணிகள் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற புனே பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் 15.5 ஓவர்களின் முடிவில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 22 ரன்கள் குவித்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். புனே தரப்பில் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உனத்கட், சாம்பா, கிரிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 74 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்குகிறது புனே சூப்பர் ஜெயன்ட்ஸ். இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இப்போட்டியில் வென்றாக வேண்டிய சூழலில் 73 ரன்களை சேஸ் செய்வது புனே அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

Photo Courtesy: IPL10