Published:Updated:

#DDvRCB விராட் கோலி அரை சதம்.. டெல்லிக்கு 162 ரன்கள் டார்கெட்!

குருபிரசாத்
#DDvRCB விராட் கோலி அரை சதம்.. டெல்லிக்கு 162 ரன்கள் டார்கெட்!
#DDvRCB விராட் கோலி அரை சதம்.. டெல்லிக்கு 162 ரன்கள் டார்கெட்!

ஐபிஎல் 10-வது சீசனில், இன்று நடைபெறும் 56-வது லீக் போட்டியில் டெல்லி, பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. டெல்லியில் நடக்கும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

#DDvRCB விராட் கோலி அரை சதம்.. டெல்லிக்கு 162 ரன்கள் டார்கெட்!


கேப்டன் கோலி மற்றும் கெயில் ஆகியோர் சற்று நிலைத்து ஆடினர். கோலி 58, கெயில் 48 ரன்களில் அவுட் ஆகினர். இதையடுத்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. 


டெல்லி தரப்பில் கமின்ஸ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.  இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை, ஏற்கெனவே இழந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.