Published:Updated:

ஐ.பி.எல் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் வென்றது பெங்களூர் அணி! #DDvRCB

விக்னேஷ் செ
ஐ.பி.எல் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் வென்றது பெங்களூர் அணி! #DDvRCB
ஐ.பி.எல் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் வென்றது பெங்களூர் அணி! #DDvRCB

ஐபிஎல் 10-வது சீசனில், இன்று நடைபெற்ற 56-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ்  அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய பெங்களூர் அணி இருபது ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தார். டெல்லி தரப்பில் கமின்ஸ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. 

ஐ.பி.எல் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் வென்றது பெங்களூர் அணி! #DDvRCB

சவாலான இலக்கை விரட்டிய டெல்லி அணியின் வெற்றிக்கு  கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டன. நேகியின் அபார பந்துவீச்சில் முகமது ஷமி, நதீம் இருவரும் அவுட்டாக,  இருபது ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 151 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 45 ரன்கள் எடுத்தார். இதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் அணி பத்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூர் அணி தரப்பில் ஹர்ஷால் படேல், பவன் நேகி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த இரு அணிகளும் ஏற்கெனவே காலிறுதி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.  மே-16 அன்று காலிறுதிப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.