Published:Updated:

பாராசூட் ரெஜிமெண்ட்; காஷ்மீரில் பயிற்சி - லெப்டினன்ட் கர்னல் தோனிக்கு ராணுவம் க்ரீன் சிக்னல்!

பிரேம் குமார் எஸ்.கே.

பிசிசிஐ -யிடம் 2 மாதம் ஓய்வு கேட்ட தோனி, குறிப்பிட்ட அந்தக் காலத்தில் ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். இதற்கு ராணுவமும் க்ரீன் சிக்னல் அளித்துள்ளது.

ராணுவத்தில் தோனி
ராணுவத்தில் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் ராணுவம் கேம்பில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியானது. பின்னர் இந்தத் தகவல் பிசிசிஐ -ஆல் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியிலிருந்து தோனி தானாக விலகினார்.

தோனி
தோனி

மேலும், ராணுவத்திடம் அவர் 2 மாதம் பயிற்சி பெற அனுமதிக்கக் கோரி விண்ணப்பிக்கவும் செய்திருந்தார். இந்த நிலையில் தோனியின் கோரிக்கைக்கு ராணுவ தளபதி பிபின் ராவது ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

`சீனியர்களுக்கு நோ; ஜூனியர்களுக்கு வாய்ப்பு' - வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி!

இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்து ஊடகத்திடம் பேசிய ராணுவ உயரதிகாரி ஒருவர், ``தோனியின் கோரிக்கைக்கு ராணுவ தளபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். கௌரவ லெப்டினன்ட் கர்னலான தோனி பாராசூட் ரெஜிமெண்ட் படைப்பிரிவில் பயிற்சி பெறுவார்” என்றார்.

தோனி இப்போதைக்கு ஓய்வு பெறவில்லை. எனினும் அவர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை. 2 மாதம் ஓய்வு கேட்டுள்ளார். ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கும் தோனி இந்த இரண்டு மாத ஓய்வைத் தனது துணை ராணுவக் குழுவுடன் செலவிடவுள்ளார்.
பிசிசிஐ அதிகாரி

மேலும், தோனி பயிற்சி பெறவுள்ள படைப்பிரிவு, பயிற்சியின் ஒருபகுதியை காஷ்மீரில் நடத்தவுள்ளது. இதனால் தோனியும் காஷ்மீரில் பயிற்சி மேற்கொள்வார் என்றே தெரிகிறது. எனினும் கவுரவ பதவி வகிக்கும் தோனி நிச்சயமாக, எந்த ஒரு ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்படமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டெஸ்ட் அணிக்கு ரோகித் ஷர்மா திரும்பியுள்ளார். மூன்று விதமான போட்டிகளிலும் ரிஷப் பன்ட் இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டுள்ளார்.