Published:Updated:

சாட்டிங்கை லீக் செய்த பெண்!- மீடூ சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்

ராம் பிரசாத்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இளம் வீரர் இமாம் உல் ஹக் மீடூ சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 இமாம் உல் ஹக்
இமாம் உல் ஹக்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. உலகக் கோப்பையின் போதே சில கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் ரசிகர்களின் விமர்சனத்துக்குள்ளாகினர். போட்டிக்கு முதல் நாள் இரவு அவுட்டிங் டின்னர் எனச் சென்றது. மைதானத்தில் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது தூங்கிவழியும் முகத்தோடு நின்றது எல்லாம் விமர்சனத்திற்குள்ளானது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இளம்வீரர் இமாம் - உல்- ஹக் தற்போது மீடூ விவகாரத்தில் சிக்கியுள்ளார். இளம்பெண் ஒருவர் இமாம் - உல் - ஹக் தனக்கு அனுப்பிய சில மெசேஜ்களை மீடூ ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் காதலிப்பதாகக் கூறி அனைவரிடமும் பேசி வருவதாகவும் அந்தப் பெண் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவுகளில் தனக்கு இமாம் அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவு செய்துள்ளார்.

இமாம் - உல்- ஹக், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் இன் உறவினர். தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாகச் செயல்பட்டதால் ரசிகர்களின் மத்தியில் இமாம் -உல் - ஹக்குக்கு நல்ல இமேஜ் இருந்தது. தற்போது இந்த மீடூ விவகாரம் அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சாட்டிங்கை லீக் செய்த பெண்!- மீடூ சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்

இமாம் - உல் - ஹக்குக்கு ஆதரவாக சிலர் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இமாம் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இன்னும் வரவில்லை. இமாம் மெளனம் தான் தற்போது இந்த விவகாரம் உண்மையாக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.