Published:Updated:

உலாவரும் வதந்திகள்... செய்தியாளர் சந்திப்பை புறக்கணிக்கும் கோலி?

ராம் பிரசாத்

இந்திய அணிக்குள்ளே கோலி டீம், ரோஹித் டீம் என இரு பிரிவுகள் இருப்பதாக தகவல் வெளியானது.

கோலி
கோலி

உலகக்கோப்பை தொடர் முடிந்ததில் இருந்தே இந்தியா கிரிக்கெட் அணியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கும், துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக தகவல் வெளியானது. இந்திய அணிக்குள்ளே கோலி டீம், ரோஹித் டீம் என இரு பிரிவுகள் இருப்பதாக செய்திகள் வெளியானது. விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இருவரும் துணைக் கேப்டன் என்ற முறையில் ரோஹித் திடம் ஆலோசனைகள் எதும் கேட்பதில்லை. தன்னிச்சையாக இருவரும் முடிவெடுப்பதாக கூறப்பட்டது. சரியாக ஆடாவிட்டாலும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடும் சில வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதாகவும்.

இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள்

கோலி தான் சொல்வதை கேட்கும் நபர்களை மட்டுமே அணிக்கு தேர்வு செய்வதாகவும் கூறப்பட்டது. பும்ரா, ரோஹித் ஷர்மா இருவரும் தவிர்க்க முடியாத வீரர்கள் இவர்களை தவிர்த்து மற்ற வீரர்களின் தேர்வு இதன் அடிப்படையில் தான் நடப்பதாகவும் இதற்கு தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே,பிரசாத்தும் இசைந்து கொடுப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தான் ரோஹித் பின்னால் சில வீரர்கள் இருப்பதாகவும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனி கேப்டன். ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு தனி கேப்டன் என அறிவிப்பு வெளியாகவுள்ளதாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு கோலியே கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில்தான், ரோஹித் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை அன்ஃபாலோ செய்தார். இது இவர்களுக்கிடேயே இருக்கும் பிரச்னையின் வெளிப்பாடு என்று கூறப்பட்டது. அதன் பின்னர் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவை அன்ஃபாலோ செய்தார் ரோஹித். ஆனால் கோலி இன்னும் ரோஹித் ஷர்மாவைப் பின்தொடர்கிறார். ‘பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன்தான் செயல்படும்’என அனுஷ்கா ஒரு ஸ்டேட்மெண்டை தட்டிவிட கோலி ஃபேன்ஸ் மற்றும் ரோகித் ஃபேன்ஸ் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட வீரர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை.

கோலி
கோலி

பொதுவாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது இந்திய அணியின் கேப்டன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பு இருக்காது. செய்தியாளர்கள் சந்திப்புக்கு முயற்சி செய்தோம். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பிசிசிஐ வட்டார தகவல் கூறுகிறது.