Published:Updated:

உலக மகளிர் கால்பந்து: ஜப்பான் சாம்பியன்!

விகடன் விமர்சனக்குழு

ஜூலை 18,2011

ஜெர்மனியில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ##~~##

ஜெர்மனியின் ஃபிராங்க்‍ஃபர்ட் நகரில் கடந்த ஒரு வார காலமாக மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது.

இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஜப்பானும், அமெரிக்‍காவும் மோதின. இதில்  ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்‍கில், அமெரிக்‍காவை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த போட்டியை ஜப்பானில் தொலைக்‍காட்சி மூலம் நேரடியாக பார்த்துக்‍கொண்டிருந்த அந்நாட்டு ரசிகர்கள் தங்கள் அணி வெற்றி பெற்றதும் வீதிகளில் திரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.