Published:Updated:

உலக கோப்பை கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தியது மெக்சிகோ!

விகடன் விமர்சனக்குழு
உலக கோப்பை கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தியது மெக்சிகோ!
உலக கோப்பை கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தியது மெக்சிகோ!
உலக கோப்பை கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தியது மெக்சிகோ!

ரெசைப்: உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மெக்சிகோ மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இதில் மெக்சிகோ அணி, குரோஷியா அணியை 1-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் மெக்சிகோவின் ஓ பெரால்டா பவுல் செய்தார். 9வது நிமிடத்தில் குரோஷியாவின் ராடிக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முதல் பாதி முழுவதும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பின், 46வது நிமிடத்திலேயே குரோஷியாவின் மாண்ட்சுகிக் பவுல் செய்தார். 66வது நிமிடத்தில் மெக்சிகோவின் வேஸ்குவேசிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 72வது நிமிடத்தில் மெக்சிகோவின் மார்கெஸ் அடித்த பந்து கோலானது. இதன் முலம் அந்த அணி தனது முதல் கோலை பெற்றது. 75வது நிமிடத்தில் மீண்டும் மெக்சிகோவின் குவார்டாடோ அற்புதமான கோல் அடித்தார்.

அதேபோல், 82வது நிமிடத்தில் மெக்சிகோவின் ஹெர்ணாண்டஸ் கோல் அடிக்க அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்நதது. நீண்ட நேரமாக கோல் எதுவும் அடிக்காமல் இருந்த குரோஷியாவிற்கு 87வது நிமிடத்தில் பெரிசிக் முதல் கோலை பதிவு செய்தார். இரண்டாவது பாதியின் முடிவில் குரோஷியாவை 1-3 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வீழ்த்தியது. ஆட்டநாயனாக மெக்சிகோவின் தடுப்பாட்டக்காரரான மார்க்கெஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.